search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க கட்டி மோசடி"

    • மாயமான வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கோவையில் நகைப்பட்டறை நடத்தி ரூ.1.5 கோடி தங்கத்துடன் வடமாநில வாலிபர் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவை இடையர் வீதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 47). இவர் வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளாக நகைப்ப ட்டறை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் எனது பட்டறையில் கொல்கத்தாவை சேர்ந்த சுஜித் மைட்டி (40) என்பவர் 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து .

    பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழில் ரீதியான பழக்கத்தில் நான் மற்றும் எனது உறவினர் ஆசிஸ் ஆதிக் ஆகியோர் சேர்ந்து சுஜித் மைட்டியிடம் ஒரு கிலோ 150 கிராம் தங்க கட்டிகளை ஆபரணங்களாக மாற்ற கொடுத்திருந்தோம்.

    ஆனால் அவர் தங்க கட்டிகளை வாங்கி மோசடி செய்து விட்டு தலை மறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. .

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். கோவையில் மட்டும் அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் 4 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்க கட்டிகளுடன் அவர் தப்பி சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவர் வேறு யாரையாவது இது போல் ஏமாற்றியுள்ளாரா? அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நகைப்பட்டறை நடத்தி ரூ.1.5 கோடி தங்கத்துடன் வடமாநில வாலிபர் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×